கேசவன், சரஸ்வதி ‘தலைவிதி’ இன்று தெரிந்து விடும்

Malaysia, News, Politics

 73 total views,  1 views today

கோலாலம்பூர்-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பிகேஆர் கட்சி நேற்று அறிவித்தது.

75 தொகுதிகளில் போட்டியிடும் பிகேஆர் கட்சி தனது 72 வேட்பாளர்களை அறிவித்து விட்டது. சுங்கை சிப்புட், தாப்பா உட்பட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி இன்னும் அறிவிக்கவில்லை.

பிஎஸ்எம், மூடா ஆகிய கட்சிகள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் போட்டியிட எத்தனித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.  அதன் அடிப்படையில் சுங்கை சிப்புட், தாப்பா, ஏனைய மற்றொரு தொகுதிக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படலாம்.

சுங்கை சிப்புட் தொகுதியில் எஸ்.கேசவனும் தாப்பா தொகுதியில் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் சரஸ்வதி கந்தசாமியும் போட்டியிடலாம் என நம்பப்பட்டு வந்தது.

இவ்விருவரின் பெயரும் நேற்றைய வேட்பாளர் அறிவிப்பில் அறிவிக்கப்படாடது பெரும் கேள்வியாக எழுந்த நிலையில், இன்று இவர்களில் தலைவிதி என்னவென்று எழுதப்பட்டு விடும்.

கத்தி முனையில் தொங்குவதை இவ்விருவரின் நிலைமையும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

Leave a Reply