கேமரன் மலைக்கு பதிலாக தெலுக் இந்தான் – டத்தோஶ்ரீ சரவணன்

Malaysia, News, Politics

 131 total views,  1 views today

ரா.தங்கமணி

மஇகாவின் பாரம்பரியத் தொகுதியான கேமரன் மலைக்கு பதிலாக தெலுக் இந்தான் தொகுதியில் போட்டியிட மஇகா முடிவு செய்துள்ளது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ  எம்.சரவணன் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கேமரன் மலை தொகுதியில் மஇகா போட்டியிட்டாலும் அங்கு நடந்த இடைத் தேர்தலில் அம்னோ வேட்பாளர் களமிறக்கப்பட்டார். இப்போது கேமரன் மலைக்கு பதிலாக தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில்  போட்டியிட கட்சி முடிவெடுத்துள்ளது.

ஆயினும் இத்தொகுதியில் போட்டியிடுவது தொடர்பில் மஇகா முடிவு செய்திருந்தாலும் தேசிய முன்னணியி கூட்டத்தில் இறுதி முடிவு செய்யப்படும் என்று செய்தியாளர்களைச் சந்தித்த டத்தோஶ்ரீ  சரவணன் இவ்வாறு கூறினார்.

Leave a Reply