சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பேருந்து கட்டண நிதி உதவி !

Education, Indian Student, Malaysia, Malaysia, News, Tamil Schools

 213 total views,  1 views today

– குமரன் –

கோல லங்காட் – 15 செப் 2022

சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளிப் பேருந்து கட்டண நிதி உதவி வழங்கப்பட்டது.

சிலாங்கூர் மாநில அரசால் 2022 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து அது வழங்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ கணபதிராவின் சிறப்பு அதிகாரியான யோகேஸ்வரி சாமிநாதன் தெரிவித்தார்.

நிதி வழங்கும் நிகழ்ச்சியில் யோகேஸ்வரி சாமிநாதனுடன் கமலநாதன் செல்லப்பன், சிலாங்கூர் மாநில பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள், கோலாலங்காட் மாநகர் மன்ற உறுப்பினர் ஹரிதாஸ் இராமசாமி, கோலா லங்காட் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் நிகராளியாக வெண்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • கிழக்கு கேரித் தீவு தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 32 மாணவர்களுக்கு ரிம 9,600 நிதி வழங்கப்பட்டது.
  • தெற்கு கேரித் தீவு தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு ரிம 7,500 நிதி வழங்கப்பட்டது.
  • மேற்கு கேரித் தீவு தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 36 மாணவர்களுக்கு ரிம 10,800 நிதி வழங்கப்பட்டது.
  • சுங்கை புவாயா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 12 மாணவர்களுக்கு ரிம 3,600 நிதி வழங்கப்பட்டது.
  • ஜுக்ரா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 14 மாணவர்களுக்கு ரிம 4,200 நிதி வழங்கப்பட்டது.
  • சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு ரிம 6,000 நிதி வழங்கப்பட்டது.
  • காடோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு ரிம 6,000 நிதி வழங்கப்பட்டது.
  • தும்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு ரிம 6,000 நிதி வழங்கப்பட்டது.
  • தெலுக் பங்ளிமா காராங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு ரிம 15,000 நிதி வழங்கப்பட்டது.
  • ஜெஞ்சாரோம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 35 மாணவர்களுக்கு ரிம 10,500 நிதி வழங்கப்பட்டது.
  • சுங்கை சிடு தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 7 மாணவர்களுக்கு ரிம 2,100 நிதி வழங்கப்பட்டது.
  • சுங்கை மங்கிஸ் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 27 மாணவர்களுக்கு ரிம 8,100 நிதி வழங்கப்பட்டது.
  • தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 33 மாணவர்களுக்கு ரிம 9,900 நிதி வழங்கப்பட்டது.

இத்ய் வரையில் 331 மாணவர்களுக்கு ரிம 99,300 நிதி மாணவர்களின் பள்ளிப் பேருந்துக் கட்டண உதவி நிதியாக வழங்கப்பட்டது.

Leave a Reply