
கொன்று புதைக்கப்பட்ட 1,200க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டுபிடிப்பு (Video News)
425 total views, 1 views today
கீவ் – 12 ஏப்பிரல் 2022
குரல் : டாஷினி இந்திர பத்மன்
உக்ரைன் மீது ரஷியா 48ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைனின் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் பொதுமக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட உடல்கள் சாலையில் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தலைநகர் கீவ் அருகே உள்ள நகரங்களில் கொன்று புதைக்கப்பட்ட 1,200க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகள் பொதுமக்களை கொன்று உடல்களை ஒரே இடத்தில் மிகப்பெரிய பள்ளத்தை தோண்டி அதில் புதைத்துள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.