கோத்தா கெமுனிங் வட்டாரத்தில் தீபாவளி பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன

Malaysia, News

 124 total views,  1 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

தீபாவளி பெருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு வழங்கும் தீபாவளி பற்றுச் சீட்டு கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது.

தாமான் ஶ்ரீ மூடாவிலுள்ள மைடின் பேரங்காடியில் பதிவு பெற்ற 550 பேருக்கு தீபாவளி பற்றுச்சீட்டுகள்  வழங்கப்பட்டன என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

பி40 பிரிவைச் சேர்ந்த மக்கள் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ வேண்டும் எனும் நோக்கில் மாநில அரசு கடந்த சில ஆண்டுகளாக விழாக்கால பற்றுச்சீட்டுகளை வழங்கி வருகிறது.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றத் தொகுதியில் தகுதி வாய்ந்தவர்களுக்கு தீபாவளி பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு வெ.55,000 மதிப்புடைய பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

தலா ஒருவருக்கு வெ.100 மதிப்புடைய பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதன் வழி அவர்கள் தங்களது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். நாம் மட்டுமல்லாது மைடின் பேரங்காடி நிறுவனம் வெ.85 மதிப்புடைய உணவுப் பொருள் பொட்டலங்களை வழங்கியது.

பெருநாள் காலங்களின்போது வசதி குறைந்த மக்கள் இக்குதூகலத்தில்  விடுபட்டு விடக்கூடாது எனும் நோக்கில் சிலாங்கூர் மாநில அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. தீபாவளி திருநாளுக்கு மட்டுமின்றி சீனப்புத்தாண்டுக்கும் நோன்புப் பெருநாளுக்கும் விழாக்கால பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் குறிப்பிட்டார்.

இதர செய்திகள்:

Leave a Reply