கோயில்கள் ஆன்மீகப் பணியோடு, கல்வி, சமூக மேம்பாட்டு அறப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் ! – சரவணன்

Malaysia, News, Religion

 58 total views,  1 views today

– குமரன் –

ஈப்போ – 11 செப் 2022

“பேரா மாநில இந்துக் கோயில்கள் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்ததில் மிக்க மகிழ்ச்சி.”

“கோயில் நிர்வாகங்கள், அதன் நிலம், கணக்கறிக்கை குறித்த ஆவணங்களை முறையாக வைத்திருக்க வேண்டும். கோயில்களுக்கு முறையான நிதி ஒதுக்கீடு வேண்டும்.  இதன் தொடர்பில், கோயில்கள் குறித்தத் தகவல்களை சேகரிக்க மனிதவள அமைச்சின் கீழ் மலேசிய இந்துக் கோயில்கள் தகவல் ஒருங்கிணைப்பு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.”

“நமது கோயில்கள் ஆன்மீகப் பணியோடு, கல்வி, சமூக மேம்பாட்டு அறப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். சமூக உருமாற்று மையங்களாக கோயில்கள் செயல்பட வேண்டும்.”

ஈப்போவில் நடைபெற்ற  மாநில இந்துக் கோயில்கள் வழிபாட்டு மன்ற மாநாட்டைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில்  மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ மு சரவணன் இவ்வாறு பேசினார்.

Leave a Reply