
கோல லங்காட் வனப்பகுதியை மேம்படுத்தும் முடிவு ரத்து
469 total views, 2 views today
ஷா ஆலம்-
கோல லங்காட் உத்தாரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை மேம்படுத்துவதற்கு ஏதுவாக அதன் நிலத் தகுதியை மாற்றம் செய்யும் முடிவை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு நேற்று ரத்து செய்தது.
எனினும், அங்குள்ள கம்போங் பூசுட் பாரு பூர்வக்குடியினர் நிலப்பகுதியை தகுதி மாற்றம் செய்யும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மொத்தம் உள்ள 1,326 ஏக்கரில் 104 ஏக்கர் பகுதியில் மட்டும் நிலத் தகுதி மாற்றம் தொடர்ந்து அமலில் இருக்கும். கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் அமைக்கும் போது இட மாற்றம் செய்யப்பட்ட பூர்வக்குடியினருக்கான நிலபிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
மேலும், இசிஆர்எல் எனப்படும் கிழக்கு கரை ரயில் திட்டத்திற்காக அந்த வனத்தின் சிறிய பகுதியை தகுதி மாற்றம் செய்தது தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அவர் சொன்னார்.