கோழி இறைச்சி இறக்குமதி : தொடருமா ? முடிவுறுமா ?

Malaysia, News

 73 total views,  1 views today

கோலாலம்பூர் – 17 ஆகஸ்டு 2022

கோழி இறைச்சியின் இறக்குமதிக்கான அனுமதி தொடருமா அல்லது முடிவுறுமா என இன்று அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என உள்நாட்டு வாணிபம், பயனீட்டாளர் விவகார துணை அமைச்சர் ரோசோல் வாஹிட் குறிப்பிட்டார்.

சந்தையில் கோழி இறைச்சி அதிகமாக இருப்பதாகவும் சிங்கப்பூருக்கு உள்ளூர் கால்நடை வளர்ப்பாளர்கள் ஏற்றுமதி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

கடந்த ஜூன் 1 முதல் மலேசியக் கோழி இறைச்சி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருந்தது. உள்நாட்டு உணவு உற்பத்தி சமநிலை காண இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது இந்தத் தடை தொடரப்படுமா என்பதும் அதனை ஒட்டிய காரணங்களையும் வேளாண், உணவு தொழில்துறை அமைச்சு ஆய்வு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பல மூலப் பொருட்களின் விலை சமநிலை கண்டிருந்தாலும்கூட, வியாபாரிகள் இன்னும் உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்கவில்லை என ரோசோல் சொன்னார்.

இவ்விவகாரம் குறித்து தமது அமைச்சு கண்காணித்து வருவதாகவும் முறையான நவடிக்கையை விலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் 2011இன் படி எடுக்கும் எனவும் சொன்னார்.

Leave a Reply