கோழி தட்டுப்பாடு; கடையை மூடும் சிங்கப்பூர்

News, World

 265 total views,  4 views today

சிங்கப்பூர்-

ஜூன் 1ஆம் தேதி முதல் கோழி ஏற்றுமதிக்கு மலேசியா விதித்துள்ள தடையால் சிங்கப்பூரில் கோழிகளை விற்பனை செய்யும் கடைகளை தற்காலிகமாக மூடப்படும் சூழலை எதிர்கொண்டுள்ளன.

இந்த நடவடிக்கை ஒரு மாதத்திற்கு சுமார் 3.6 மில்லியன் கோழிகளை உள்ளடக்கியது என்பதோடு மலேசியாவில் கோழி விலை மற்றும் உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்பும் வரை தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் உணவு இலாகாவின் (SFA) கூற்றுப்படி, பிரேசில் (49%) மற்றும் அமெரிக்கா (12%) தவிர, இக்குடியரசின் கோழி விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கு மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

Leave a Reply