கோழி, முட்டை ஆகியவற்றுக்கான மானிய உதவி ஆண்டிறுதி வரை தொடரும் ! – அமைச்சர்

Business, Economy, Local, Malaysia, News

 82 total views,  1 views today

– குமரன் –

புத்ராஜெயா – 9/10/2022

இம்மாதம் முதல் இவ்வாண்டு இறுதி வரை கோழிப் பண்ணை வைத்திருப்பவர்களுக்கும் முட்டை விநியோகிப்பாளர்களுக்கும் அரசாங்கத்தின் மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என வேளாண், உணவு தொழில் துறை அமைச்சர் நோனல்ட் கியாண்டே தெரிவித்தார்.

ஒரு முட்டைக்கு 8 சென்னும், ஒரு கிலோ கோழிக்கு 80 சென்னும் நிதியுதவி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த 7ஆம் நாள் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் முடிவெடுக்கப்பட்டதாகவும் மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பால் ஏற்படும் கூடுதல் செலவுகளைச் சமாளிக்க விநியோகிப்பாளர்களுக்கு இந்த உதவி நிதி தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் அவர் விளக்கினார்.

சில்லறை விலைக் கட்டுப்பாடு – தீபகற்ப மலேசியா:

  • ஒரு கிலோ கோழி இறைச்சி – ரிம 9.40
  • A வகை முட்டை – 45 சென்
  • B வகை முட்டை – 43 சென்
  • C வகை முட்டை – 41 சென்

Agrobank வங்கியின் வழி இந்த உதவி நிதி விநியோகிப்பாளர்களுக்கு செலுத்தப்படும்.

இந்த உதவி நிதிக்காக கடந்த அக். 4 வரை 13,440 பேர் விண்ணப்பம் செய்திருந்ததாகவும் அதன் பொருட்டு இவர்களுக்கு ரிம 1.136 பில்லியன் நிதி அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், விண்ணப்பிக்காத விநியோகிப்பாளர்கள் இன்னமும் விண்ணப்பம் செய்யலாம் எனத் தெரிவித்தார்.

அதே சமயம், சந்தையில் இவ்விரு உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நேராது எனவும் அவர் சொன்னார்.

Leave a Reply