கோவிட்டால் தந்தை இறந்தாரா? உண்மையை கண்டறிய மகள் போலீஸ் புகார்

Crime, Malaysia, News

 207 total views,  2 views today

சுங்கைப்பட்டாணி

கெடா சுங்கைப்பட்டாணி பொது மருத்துவமனையில் குழந்தை போல் தவழ்ந்த வந்து தள்ளாடிய நிலையில் கட்டிலை பிடித்தவாறே எழுந்த 74 வயதான முதியவர் கே.ஏகாம்பரம் கீழே விழுந்து மரணமுற்ற சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று அம்முதியவரின் குடும்பத்தினர் போலீஸ் புகார் செய்துள்ளனர்.


மருத்துவமனையில் கட்டிலிருந்து விழுந்ததாலேயே தமது தந்தை ஏகாம்பரம் மரணமுற்றார் எனவும் கோவிட்-19 தொற்றால் அவர் மரணிக்கவில்லை எனவும் அவரின் மகள் சித்ராதேவி போலீஸ் புகாரில் கூறியுள்ளார்.


தமது தந்தையின் மரணத்திற்கான உண்மை காரணம் கண்டறியப்பட வேண்டும் எனவும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.


இதனிடையே முதியவர் ஏகாம்பரம் தவழ்ந்தபடியே மருத்துவமனை கட்டிலை பிடித்து எழுவதும் பின்னர் கீழே விழுந்த நிலையில் கிடப்பதுமான காணொளி சமூக ஊடகங்களில் வைரவான நிலையில் மருத்துவமனையின் செயல்பாட்டை பலரும் கண்டித்தனர்.

Leave a Reply