கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு வெ.10.3 மில்லியன் நிதியுதவி

Uncategorized

 323 total views,  1 views today

கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்றால் மரணிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உதவிநிதி வழங்கும் பொருட்டு தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் எனப்படும் நட்மா கடந்த வெள்ளிக்கிழமை வரை 10.3 மில்லியன் வெள்ளியை வழங்கியுள்ளது.
கோவிட்-19 தொற்றால் இறந்துள்ளவர்களில் இதுவரை 2,061 பேருக்கு இந்நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 3,681 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் 590 விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் 967 விண்ணப்பங்கள் தரவு பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் நட்மாவின் தலைமை இயக்குனர் டாக்டர் அமினுடின் ஹாசிம் தெரிவித்தார்.
கோவிட்-19 வைரஸ் தொற்றால் மரணமடைவோரின் குடும்பத்திற்கு உதவும் பொருட்டு ஒரே தவணையாக 5,000 வெள்ளி வழங்கப்படுகிறது.

Leave a Reply