கோவிட்-19 நோயாளிகளுக்காக ஆக்சிஜன் இயந்திரங்கள் அன்பளிப்பு

Health, Malaysia, News

 238 total views,  1 views today

டி, ஆர்,ராஜா

பினாங்கு –

பினாங்கு இந்து இயக்கமும் நுண்கலை மையமும் இணைந்து பினாங்கு பொது மருத்துவமனையின் கோவிட் -19 நோயாளிகளுக்கு பிராணவாயு (ஆக்கிஜன்) இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இந்தப் பிராணவாயு இயந்திரங்களானது பினாங்கு பொது மருத்துமனையில் கோவிட் நோயாளிகளுக்கு ஏற்படும் பிராணவாயு இயந்திரப் பற்றாக்குறைப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும் என நம்பப்படுகிறது.

அண்மைய ஆய்வின்படி பினாங்கில் பல இடங்கள் சிவப்பு மண்டலமாகவும் கோவிட் -19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமாகவும் உள்ளது. பினாங்கு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு அதிகபட்ச பணியை மேற்கொள்கிறது. இருப்பினும், பிராணவாயு இயந்திரங்கள் பற்றாக்குறை அவர்களின் பணியை மேற்கொள்ள தடையாகவே உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, பினாங்கு இந்து இயக்கமும் நுண்கலை மையமும் இணைந்து ஐந்து பிராணவாயு இயந்திரங்களை தலா வெ.3500க்கு வாங்கினர். அவற்றுள் மூன்று இயந்திரங்கள் இம்மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கும் மேலும் இரண்டு இயந்திரங்கள் பொது பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோவிட் – 19 நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைபடுத்தப்பட்டிருக்கும் நோயாளிகள், தேவை ஏற்படுமாயின் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தலாம். இருப்பினும், மருத்துவர்களின் உறுதி கடிதத்தைப் பெற்றிருப்பது அவசியமாகும். இது பிராணவாயு இயந்திரங்கள் தவறாக பயன்படுத்தவதைத் தவிர்க்க உதவும். முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இவற்றைப் பயன்படுத்தி குணமடைந்த கோவிட் – 19 நோயாளிகள் மீண்டும் அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவேண்டும். இது மற்ற நோயாளிகள் அவற்றைப் பயன்படுத்த உதவும். இவ்வியந்திரங்கள் தனி நபர்களுக்கும், பினாங்கு இந்து இயக்கம், நுண்கலை மையம் உறுப்பினர்கள் வழங்கிய நன்கொடையிலிருந்து வாங்கப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில், இவ்விரு அமைப்புகளும் முன் வரிசைப் பணியாளர்களான மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ அலுவலர்கள், ‘ஆம்புலன்ஸ்’ ஓட்டுனர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கும் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர். கோவிட்-19 தொற்று நோயின் ஆரம்பம் முதல் கடமையைத் தவறாது சோர்வின்றி உழைத்த இவர்களுக்கு இறைவன் அருள் கிடைக்க வாழ்த்துகின்றனர்.

அதே வேளையில், இந்த அமைப்புகள் இதர அரசாங்க சார்பற்ற அமைப்புகளும் நிறுவனங்களும் ஒருசேர தங்களது ஒத்துழைப்பை முன் வரிசை பணியாளர்களுக்கும் சுகாதார அமைச்சுக்கும் வழங்கவேண்டுமென்று கேட்டுக் கொண்டது. அவர்களும் இது போன்ற பிராணவாயு இயந்திரங்களை வழங்க முன் வர வேண்டும் என்ற சிந்தனையை முன்வைத்தனர். மேலும், மலேசியர்களாகிய நாம் இந்த இக்காட்டான சூழ்நிலையிலிருந்து விடுபட ஒற்றுமையாக கைக்கோர்த்து முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டோமேயானால் கோவிட் நச்சு கிரிமியினால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்க முடியும் என்ற கருத்துகளைக் கூறின.

பிராணவாயு இயந்திரங்களை வாங்க நன்கொடை வழங்க விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட எண்ணின் வழி பினாங்கு இந்து இயக்கத்தையும் நுன்கலை மையத்தையும் தொடர் கொள்ளலாம். தொடர்பு எண்: 016-4449246

Leave a Reply