கோவிட்-19 நோயாளிகள் வாக்களிக்க 2 வழிமுறைகள் ! – சுகாதார அமைச்சு பரிந்துரை

Malaysia, News, Politics, Polls

 82 total views,  1 views today

குமரன் –

பெட்டாலிங் ஜெயா – 29/10/2022

எதிர்வரும் 15வது பொதுத் தேர்தலில் கோவிட்-19 நோயாளிகள் வாக்களிக்க சுகாதார அமைச்சு 2 வழிமுறைகளை தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரைத்துள்ளது.

அதனைப் பரிசீலித்து இறுதி வழிமுறைகளை அடுத்த வாரம் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

பரிந்துரை 1 :

தேர்தலில் வாக்களிக்க வரும் கோவிட்-19 நோயாளிகளுக்குத் தனி வாக்குப் பதிவு அறையும் தனி வழித்தடமும் உருவாக்கப்பட வேண்டும்.

பரிந்துரை 2 :

சுகாதார அமைச்சு அமைத்திருக்கும் கூடாரத்திற்கு கோவிட்-19 நோயாளிகள் வர வேண்டும். அவர்களுக்கானப் பாதுகாப்பு அணிகளை சுகாதார அமைச்சு ஊழியர்கள் உறுதி செய்த பின்னர் அவர்கள் வாக்களிக்கச் செல்லலாம். வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை.

ஆபத்து நிலையில் இல்லாத கோவிட்-19 நோயாளிகள் பொதுத் தேர்தலில் வாக்களிக்கப்படும் அனுமதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தான் ஶ்ரீ நோர் ஹிஷாம் முன்னதாகக் கூறி இருந்தார்.

Leave a Reply