கோவிட்- 19 பெருந்தொற்று காலத்தில் மனித நேயத்துடன் உதவி செய்வோம்

Malaysia, News

 312 total views,  1 views today

டி. ஆர். ராஜா

புக்கிட் மெர்தஜாம்-
தற்போது கோவிட் 19 பெருந்தொற்று மிக மோசமான நிலையில் இருக்கும் பட்சத்தில் பலர் வேலை இழந்தும் பலர் வீட்டிலேயே முடக்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் பொருளாதர நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் உணவிற்கு கூட பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த வறுமையின் பிடியில் சிக்கி பரிதவித்து வரும் பொது மக்களுக்கு உதவும் வகையில் லாஹாரி குரூப் ஏற்பாட்டில் பினாங்கு மாநில எம் ஜி ஆர் மறுமலர்ச்சி முன்னேற்றம் மன்றம் ஒத்துழைப்பில் 170 பேருக்கு பொருள் கூடைகள் வழங்கப்பட்டன.

தாமான் சென்டாணா ஜூரு குடியிருப்பு பகுதியில் அனைத்து எஸ் ஓ பி நடவடிக்கை திட்டங்களுக்கு இணைங்க இந்த பொருட் கூடை வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த பொருள் கூடைகள் வசதி குறைந்தவர்கள் ,பேறு குறந்தவர்கள் வயாதனவர்கள் என சீனர் ,மலாய்க்காரர்கள் ,இந்தியர் என மூவின மக்களுக்கும் வழங்கப்பட்டன.


இது போன்ற அவசர கால தருணங்களில் வசதி படைத்தவர்கள் வசதி குறைந்தவர்களுக்கு உதவிகள் வழங்க முன் வர வேண்டும் .அதன் அடைப்படையில் கடந்த வாரம் பிறை பகுதியில் இதே பொன்று 111 பேருக்கு உதவிகள் வழங்கியதுடன் அடுத்த கட்ட நடவடிக்கையாக இன்று 170 பேருக்கு வழங்கிருப்பதாக தொழிலதிபரும் லஹாரி குரூப் உரிமையாளர்களில் ஒருவரான ஹாரிவீன் ராமதாஸ் கூறினார்.

வசதி குறைந்தவர்களுக்கு இந்த உதவிகள் அவர்களின் பொருளாதார சுமையை குறைக்கும் என நம்புவதாக கூறிய ஆவர் மக்கள் சிரமத்தை எதிர்கொள்ளாமல் இருக்க இந்த உதவியை தங்கள் நிறுவனத்தின் முன்னெடுத்திருப்பது ஆத்ம திருப்தி அளிப்பதாக் என்றும் அவர் மேலும் கூறினார். மேலும் அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளும் திட்டமிட்டுவருதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வின் போது நிறுவனத்தின் உரிமையாளர் ராமதாஸ் பொருப்பாளர்கள் பினாங்கு மாநில எம் ஜி ஆர் மறுமலர்ச்சி முன்னேற்றம் மன்றம் தலைவர் எல் ஆர் சிவபாலன் பொருப்பாளர்கள் உடனிருந்தனர் .

Leave a Reply