கோவிட்-19, பொருளாதார வீழ்ச்சியை வெற்றி கொள்வோம்- பிரதமர்

Malaysia, News

 408 total views,  1 views today

கோலாலம்பூர்-

நாம் தற்போது கோவிட்-19 பெருந்தொற்று, பொருளாதார வீழ்ச்சி போன்ற சவால்களை ஒரே சமயத்தில் எதிர்கொண்டிருக்கிறோம். அது நமது நாட்டையும் உலகம் முழுவதும் நிலைத்தன்மையற்ற அரசியல் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. இந்த சுதந்திர தினத்தில் நமது முதன்மை எதிரியான கோவிட்-19 பெருந்தொற்றை கையாள தொடர்ந்து போராட வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் குறிப்பிட்டார்.


ஒவ்வொரு பிரச்சினைகளிலிருந்தும் தங்களை மீட்டெடுப்பதற்கு நாட்டின் முந்தைய தலைவர்கள் கடந்து வந்த சவால்களையும் போராட்டங்களையும் உதாரணமாக கொண்டு செயல்பட வேண்டும்.


நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோவிட்-19 பெருந்தொற்றை முழுமையாக களைவதற்கு போராட வேண்டும். இந்த போராட்டத்தின் வெற்றி நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வழியை திறப்பதுடன் கூட்டு வளப்பத்தையும் பெருக்கச் செய்யும் என்று அவர் கூறினார்.


நாட்டை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஒன்றான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பதிந்து கொண்டு அதனை செலுத்த வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Leave a Reply