
சங்காட் ஜோங் என்றுமே ஜ.செ.க.வுக்குச் சொந்தமானது ! – அந்தோணி லோக்
187 total views, 2 views today
– குமரன் –
ஈப்போ – 29/10/2022
சங்காட் ஜோங் தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் கட்சிகளுக்கு இடையே எந்தவிதமான சிக்கலும் நேராது என ஜ.செ.க.வின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
கூட்டணி முதன்மை /மூன்று தலைவர்கள் முடிவு செய்தது எனவும் அறிவிப்பானது பேரா மாநில நிலையில் இன்று நடந்ததாகவும் அவர் சொன்னார்.
நம்பிக்கைக் கூட்டணியின் மாநாடு நடத்தப்பட்டிருக்கும் முன்னதாக உயர்மட்டத் தலைமைத்துவ சந்திப்பு நடத்தியதாகவும் அதில் முடிவு செய்யப்பட்டதையே அறிவித்திருப்பதாகவும் விளக்கினார்.
அதே சமயம், சங்காட் ஜோங் என வரும்போது அந்தத் தொகுதி ஜ.செ.க.வின் கோட்டை எனவும் அதனை மற்றக் கட்சிகள் கேட்டு மன வருத்தம் நேராது எனவும் குறிப்பிட்டார்.
சங்காட் ஜோங் உட்பட பேரா மாநிலத்தில் 20 தொகுதிகளில் அமானா கட்சி போட்டியிடுவதாக இன்று காலையில் இருந்து தகவல்கள் வெளிவந்தன.
இது குறித்து தெலுக் இந்தான் அமானா கட்சியின் தலைவர் அகமாட் முன்ஸிரி அகமாட் கபீர் விளக்கமளிக்கையில், அமானா கட்சியின் தேர்தல் பிரிவு இயக்குநர் அஸ்முனி அவி அறிவித்தது போலத்தான் நம்பிக்கைக் கூட்டணியின் கீழ் அமானா கட்சி போட்டியிடும் எனக் கூறினார்.
சங்காட் ஜோங் சட்டமன்றத் தொகுதியை உட்படுத்திய எந்தவிதமான மாற்றமும் அமானா கட்சியின் தேசிய – மாநில நிலையில் இருந்து தமது தரப்பி பெறவிலை எனவும் குறிப்பிட்டார்.
ஜ.செ.க. கட்சி போட்டியிடும் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் அதே ஜ செ க போட்டியிடும் பாசிர் பெடாமார் சட்டமன்றத் தொகுதியும் தற்போது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் சங்காட் ஜோங் தொகுதியும் அமைந்துள்ளது.
இரண்டுக்கு ஒன்று (2:1) எனும் அடிப்படையில் சங்காட் ஜோங் தொகுதி அமானாவுக்கு ஜ.செ.க.வால் வழங்கப்பட்டதாக அகமாட் முன்ஸிரி அகமாட் கபீர் விளக்கமளித்திருந்தார்.