சங்கீதா ஜெயகுமாருக்கே தமது ஆதரவு- மணிமாறன்

Malaysia, News, Politics

 210 total views,  3 views today

ஷா ஆலம்-

வரும் மே மாதம் நடைபெறவுள்ள கெ அடிலான் கட்சியின் தேர்தலையொட்டி கோத்தா ராஜா தொகுதியில் களமிறங்கியுள்ள சங்கீதா ஜெயகுமாருக்கு ஆதரவு வழங்குவதாக கோத்தா ராஜா தொகுதி பிகேஆர் முன்னாள் உதவித் தலைவர் மணிமாறன் முனுசாமி தெரிவித்தார்.

மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குபவர்களே தலைமைத்துவத்திற்கு வர வேண்டும். அதன் அடிப்படையில் சங்கீதா ஜெயகுமாரின் சமூகப் பணிகள் யாவும் வரவேற்கக்கூடியதாகும்.

கடந்தாண்டு தாமான் ஶ்ரீ மூடா பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பேரிடரின்போது பலரும் உடுத்த துணிக்கூட இல்லாத சூழலை எதிர்கொண்டனர். அச்சமயம் பிறரிடமிருந்து துணிகளை தானமாக பெற்று வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களுக்கு வழங்கி உதவினார்.

ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக முகாமிட்டு பல்வேறு உதவிகளை வழங்கிய சங்கீதா போன்றோரே தலைமைத்துவத்திற்கு வர வேண்டும் எனும் எதிர்பார்ப்பில் தமது ஆதரவை வழங்குவதாக மணிமாறன் குறிப்பிட்டார்.

Leave a Reply