
சட்டவிரோத மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்ற போலீஸ்காரர்கள் இருவர் பலி
294 total views, 1 views today
காஜாங்-
சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை விரட்டி பிடிக்கச் சென்ற போலீஸ்காரர்கள் இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
புத்ராஜெயாவை நோக்கிச் செல்லும் காஜாங் சில்க் சாலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் சார்ஜண்ட் மொஹமட் அரிஃபா மொஹமட் யாசின், கான்ஸ்டபள் மொஹமட் முராட்சி மொஹமட் நாவி இருவரும் தலையிலு ம் முகத்திலும் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் மொஹமட் சயின் ஹாசன் தெரிவித்தார்.