சனிக்கிழமை அம்னோ தலைவர்களைச் சந்திக்க ஸாஹிட் அழைப்பு !

Malaysia, News, Politics

 64 total views,  1 views today

பெட்டாலிங் ஜெயா – 24 ஆகஸ்டு 2022

இவ்வாரம் சனிக்கிழமை அன்று அம்னோ தலைவர்களை சந்திக்க அழைந்த்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி.

இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகமாட் மஸ்லான், இந்த சிறப்பு சந்திப்புக் கூட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அழைப்பை கூடிய விரைவில் வெளியிடப்படும் எனவும் அது கோலாலம்பூர் உலக வாணிப மையத்தின் மெர்டேக்கா அரங்கில் பிற்பகல் 2 மணிக்கு நடத்தப்பட திட்டம்மிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிகத் தகவல் ஏதும் அந்தப் பதிவில் இடம்பெறவில்லை.

அந்த அழைப்பை அனைத்து அம்னோ தொகுதித் தலைவர்களுக்கும் செயலவை உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்படும்.

அந்தச் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்கிறவர்கள் சிவப்பு நிற் ஆடையை அணிந்து வரவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தத் திங்களன்று,டத்தோ ஓன் கட்டடத்தில் அம்னோ அவசரக் கூட்டம் நடைபெற்றதாகவும் அதில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் கூறப்படுகிறது.

அதில் சிலர் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படாததால் அதிருப்திஅடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நெருக்கடியான சூழல்தான் அடுத்து நடக்கவிருக்கும் சிறப்புக் கூட்டத்திற்கானக் காரணமாகத் தெரிகிறது.

திங்களன்று நடந்த அவசரக் கூட்டத்திற்குப் பிறகு, அதில் கலந்து கொண்ட 158 தொகுதித் தலைவர்கள் உடனடியாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியதாக சுங்கை பெசார் தொகுதித் தலைவர் ஜமால் யூனோஸ் குறிப்பிட்டார்.

அந்தக் கோரிக்கையை அம்னோ கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு கட்சியின் தலைவர் ஸாஹிட் கொண்டு செல்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply