சபாக் பெர்னாமின் பள்ளிக்கூடத் துப்புரவுத் தொழிலாளார்கள் 53 பேருடைய போராட்டத்தின் வெற்றி முழு நிறைவை அடையுமா ? (Special News – Video)

Malaysia

 324 total views,  1 views today

புத்ராஜெயா – 2 ஏப்ரல் 2022

பள்ளிக் கூடத் துப்புரவுத் தொழிலாளர்கள் 53 பேருடைய ஊதியப் பிரச்சனை குறித்து அவர்கள் கடந்த மார்ச் 29 ஆம் தேதி புத்ராஜெயாவில் அமைதி மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களின் ஊதிய பாக்கி ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் செலுத்திவிடப் படும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்தது. எனவே, அவர்கள் தங்களின் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

அரசாங்கத் துறைகளின் ஒப்பந்த பணியாளர்களின் கூட்டமைப்பான Jaringan Pekerja Kontrak kerajaan (JPKK)கல்வி அமைச்சு வழங்கிய வாக்குறுதியை மிக அணுக்கமாகக் கவனித்து வந்தது. சம்பந்தப்பட்ட மூன்று துப்புறவு நிறுவனங்களும் கடந்த நவம்பர் 2021இல் இருந்து செலுத்தாத ஊதிய பாக்கியைச் செலுத்தி விட்டதை உறுதி செய்தது.

புத்ராஜெயாவில் மேற்கொள்ளப்பட்ட போராட்டமானது தொழிலாளர் சமூகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுவதாக JPKK தெரிவித்தது.

இருந்த போதிலும், குறிப்பிட்ட அக்காலக் கட்டத்தில் இத்தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது JPKK விடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இது முறையானப் பிடித்தம் அல்ல எனவும் அது கூறியது.

அடிப்படையற்ற இந்தப் பிடித்தம் குறித்து ஆள் பலத் துறை எனப்படும் Jabatan Tenaga Kerja (JTK)விடம் கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளது.

மேலும், ஊழியர்களுக்கு ஊழியர் சேமநிதி வாரியம் KWSP, பெர்க்கேசோ, ஊழியர் காப்புறுதி SIP ஆகியவற்றை இன்னும் தொடர்புடைய நிறுவனங்களும் செலுத்த வில்லை என அறியப்படுகிறது.

இதனைத் தவிர, எதிர்காலத்தில் இது போன்ற ஒப்பந்த அல்லது குத்தகை அடிப்படையிலானப் பணியாளர்களை அமர்த்துவதையத் தவிர்த்து நிரந்தரப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தவும் தரமான குத்தகை நிறுவனங்களுக்கு அரசாங்கம் தொடர்புடையக் குத்தகையை வழங்கவும் JPKK தொடர்ந்து வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டது.

இந்தப் போராட்டம் தொடரும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்தது.

அதே சமயம், சபாக் பெர்ணாம் துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் JPKK தமது நன்றியைப் புலப்படுத்திக் கொண்டது.

Leave a Reply