சமூக ஊடகங்களில் பதிவிடும்போது நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள் ! – தொடர்பு, பல்லூடக ஆணையம் அறிவுறுத்து

Malaysia, News, Politics, Polls

 108 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 20-10-2022

எதிர்வரும் நவம்பர் 19 ஆம் நாள் நாட்டின் 15வது பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிடும் பயனர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். மரியாதையும் பண்பையும் கொண்டவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என தொடர்பு, பல்லூடக ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மாமன்னர், சமயம், இனம் ஆகியவற்றைத் தொடர்புப்படுத்திய தவறானத் தகவல்களும் பொய்ச் செய்திகளும் பரவாமல் இருக்க ஆணையம் மிகவும் கவனமாகக் கவனித்து வரும் எனவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இதனை மீறுவோருக்கு அதிகப்படியாக ரிம 50.000 தண்டம் அல்லது ஒராண்டு கால சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

பொது அமைதிக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களால் கொடுக்கப்படும் புகாருக்கு எதிராகத் தற்போது நடப்பில் இருக்கும் சட்டம் தமது கடமையைச் செய்யும் என ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் ஏதேனும் பகிர்வைப் பொது மக்களுக்குக் கிடைத்தால், https://aduan.skmm.gov.my/ எனும் இணையப் பக்கத்திலும் பொய்ச் செய்தி தொடர்பானப் புகாரை https://sebenarnya.my/salur/ எனும் இணையப் பக்கத்திலும் பதிவிடலாம்.

Leave a Reply