சமூக ஊடகங்களில் விமர்சனத்தை முன்வைக்கும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை கடிதத்தை கொடுக்கும் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும் ! – கல்வி அமைச்சர்

Education, Malaysia, Malaysia, News

 72 total views,  1 views today

குமரன் | 27-1-2023

சமூக ஊடகங்களில் தங்களுக்கு மனதில் பட்டக் கருத்தையோஇ அல்லது விமர்சனத்தையோ முன்வைக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக எச்சரிக்கை கடிதம் கொடுக்கப்படும் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் வலியுறுத்தினார்.

முன்னதாக, ஜாலான் ரேக்கோ இடைநிலைப்பள்ளியின் சிறப்புக் கல்வி ஆசிரியர் ஹஸ்மாடி ஹம்டான் சமூக வலைத்தளத்தில் தமது விமர்சனத்தை முன்வைத்ததற்கு கல்வி அதிகாரி எச்சரிக்கை கடிதம் பெற்றிருந்தார்.

மலேசியக் கல்வி முறையில் சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் முன்னிலைப் பணியாளர் ஆவர். அவர்களின் கவலை தமது கவலையாகக் கருதுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

விமர்சனங்கள் மிக முக்கியமானவை. அதிலும் குறிப்பாக ஆக்ககரமான விமர்சனங்களும் ஆசிரியர்களின் அறிவுத்திறனும்,  மாணவர்களின் முன்னேற்றத்திற்காக இருக்க வேண்டும் என அவர் மேலும் சொன்னார்.

வகுப்பறை, பள்ளி, கல்வி அலுவலகம் உட்பட அனைத்து நிலைகளைலும் நேர்மையான – உண்மையான வழியால் மட்டுமே சிறந்த நிர்வாகத்தை முன்னிறுத்த முடியும் என்றார் அவர்.

Leave a Reply