
சமூக நல்லுறவு மேம்படட்டும்- கணபதிராவ்
353 total views, 2 views today
ஷா ஆலம்
இந்துக்களின் வரலாறு பண்பாடு கலாச்சாரங்களோடு பின்னி பிணைந்ததாகும். இன்றளவும்இந்துக்களின் பண்பாடுகளை பறைசாற்றவும் அடுத்த தலைமுறைக்கு கடத்தவும் இச்சித்திரை புத்தாண்டு வழி கோலுகிறது.
“சித்திரையே வா நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா” என்று சொல்லும் மரபு காணப்படுகிறது இதன்மூலம் சித்திரையின் சிறப்பினை காணலாம்.

சித்திரை மாதம் என்பது இளவேனில் காலத்தினுடைய ஆரம்பமாகும். இக்காலமே மகிழ்ச்சியான நிகழ்வுகள் பண்டிகைகள் போன்றனவற்றின் ஆரம்பமாக அமைகிறது.
இக்காலகட்டத்தில் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவு மேம்பட, மக்களின் வாழ்வாதாரம் செழித்தோங்க, அன்பும் அரவணைப்பும் என்றும் நிறைந்திட பிறக்கும் சித்திரை புத்தாண்டு அனைவருக்கும் சுபீட்சத்தை நிலைப்பெறச் செய்யட்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.