சரவணனை எதிர்ப்பாரா சரஸ்வதி ?

Malaysia, News, Politics, Polls, Special News

 127 total views,  1 views today

இரா. தங்கமணி

கோலாலம்பூர் – 14/10/2022

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்கான முரசு கொட்டப்பட்டுள்ளது.

எந்தெந்த தொகுதியில் யார் வேட்பாளர் ? என்ற பரிசீலனையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.

அவ்வகையில் மஇகா 9 நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும்  என அறிவித்துள்ளது.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவேன் என அறிவித்துள்ள நிலையில் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தாப்பா நாடாளுமுன்றத் தொகுதியில் போட்டியிடக்கூடும் என கணிக்கப்படுகிறது.

தாப்பா  தொகுதியில் தேசிய முன்னணியை எதிர்த்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளராக பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவர் நிறுத்தப்படலாம்.

டத்தோஸ்ரீ சரவணனை எதிர்த்து பிகேஆர் கட்சியின் வேட்பாளராக அதன் உதவித் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள திருமதி சரஸ்வதி கந்தசாமி போட்டியிடுவாரா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

தமக்கு நெருக்கமான தமிழ் நாளிதழின் வழி மஇகாவையும் டத்தோஸ்ரீ சரவணனையும் எதிர்த்து வரும் சரஸ்வதி கந்தசாமி, தேர்தல் களத்தில் டத்தோஸ்ரீ சரவணனை நேருக்கு நேர் எதிர் கொள்வாரா?

மஇகாவுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என தனது எழுத்தின் வழி போராடி கொண்டிருக்கும் சரஸ்வதிக்கு பிகேஆர் கட்சியின் சார்பில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படலாம்.

ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கு பதிலாக தாப்பாவில் நேரடியாக களமிறங்கலாமே? 

இந்திய சமுதாயத்தின் மீது திருமதி சரஸ்வதி உண்மையிலேயே பற்று கொண்டிருப்பாரேயானால்  தாப்பா தொகுதியில் களமிறங்கி மஇகாவுக்கு பாடம் புகட்டலாமே?   

நாளிதழின் வழி வாய்ச்சவடால் விடுப்பதை விடுத்து நேரடி களத்தில் அவர் குதிப்பாரா?  பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply