சரவாக் முதலமைச்சர் பதவி பிரீமியர் சரவாக் என மாற்றம்

Malaysia, News

 107 total views,  4 views today

கூச்சிங்-

சரவாக் முதலமைச்சர் பதவிக்கான பெயர் இன்று முதல் சரவாக் பிரதமர் என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் கண்டுள்ளது.
பிரீமியர் சரவாக் என அமைந்துள்ள பெயர் மாற்றத்திற்கு ஏற்ப இனி சரவாக் முதலமைச்சரின் அலுவலகம் இனி சரவாக் பிரீமியர் அலுவலகம் என்று அழைக்கப்படுமென அம்மாநில அரசாங்க செயலாளர் டத்தோ அமார் ஜாவுல் சமியோன் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதலமைச்சர் பொறுப்புக்கான பெயரை பிரதமர் என மாற்றக்கோரும் தீர்மானம் சரவாக் சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Leave a Reply