சாலையில் விதிமீறல் : ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினரின் மகிழுந்துவுக்குத் தண்டம் !

Malaysia, News, Politics

 36 total views,  1 views today

– குமரன் –

பத்து பகாட் – 17 செப் 2022

ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் சுகாதாரம் மாநில ஒற்றூமைக்கான செயற்குழுத் தலைவருமான லிங் தியான் சூன்னின் பயன்பாட்டிற்காக இருக்கும் மகிழுந்து சாலை போக்குவரத்து விதிமீறல் புரிந்ததற்காக தண்டம் விதிக்கப்பட்டது.

கருப்பு வண்ண கேம்ரி வகை மகிழுந்துவைச் செலுத்திய ஓட்டிநர் விசாரணைக்காகப் பிற்பகல் 3.30 மணிக்கு அழைக்கப்பட்டதாக பத்து பகாட் மாவட்டக் காவல்துறைத் தலைவர் இஸ்மாயில் டோல்லா தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து கடந்த புதன்கிழமை இரவு 11.00 மணிக்குத் தமது தரப்புக்கு அனுப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், கடந்தத் திங்கட்கிழமை காலை 9.45 மணிக்கு இங்குள்ள தொங்காங் பெச்சா சாலையில் அந்த விதிமீறல் நடந்திருப்பது விசாரணையில் தெரிய வந்ததாகவும் சொன்னார்.

அந்த மகிழுந்து சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்குச் சொந்தமானது எனவும் அது யோங் பெங் சட்டமன்ற உறுப்பினருமான லிங் தியான் சூன்னின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

தொங்கோங் பெச்சா சாலையில் ஏற்பட்ட நெரிசல் காரனமாக அவசர வழித்தடத்தைப் பயன்படுத்தும் 24 வினாடிகள் கொண்ட காணொலி காவல்துறையின் வசம் கிடைக்கப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply