சாலை பராமரிப்பில் உள்ள வேறுபாடுகளை கூட அறியாதவரா தேமு வேட்பாளர் ?

Malaysia, News, Politics, Polls

 95 total views,  1 views today

இரா. தங்கமணி

கிள்ளான் – 11/11/2022

பொதுப்பணி துறையின் வசமுள்ள மத்திய அரசின் பராமரிப்பு சாலைக்கும் மாநில அரசின் பராமரிப்பு சாலைக்கும் வித்தியாசம் தெரியாமல் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி தேசிய முன்னணி வேட்பாளர் தீ ஹோய் லிங் உளறிக் கொண்டிருக்கிறார் என்று அத்தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் வீ.கணபதிராவ் சாடினார்.

ஜாலான் பண்டமாரான், ஜாலான் கிம் சுவான் ஆகிய சாலைகள் தொடர்பில் தீ ஹோய் கேள்வி எழுப்புகிறார்.

மத்திய அரசின் பராமரிப்பின் கீழ் வரும் சாலைகளை மாநில அரசு சீர் செய்ய முடியாது. மாநில அரசு ஒதுக்கும் நிதி மாநில அரசின் வசமுள்ள பராமரிப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.அந்நிதியை கொண்டு மத்திய அரசின் செலவீனங்களில் நாம் ஈடுகட்ட முடியாது.

அவ்வாறு செலவு செய்யும்போது மத்திய அரசிடமிருந்து திரும்பப் பெற முடியாது. அதுமட்டுமல்லாது மாநில அரசின் செலவுகளின் தணிக்கை அறிக்கையை சமர்ப்பிப்பதிலும் சிக்கல்கள் நிலவலாம்.

இவை அனைத்தையும் தீ ஹோய் அறிந்துள்ளாரா? அல்லது எதுவும் தெரியாதது போல் நடிக்கிறாரா? என்று கணபதிராவ் கேள்வி எழுப்பினார்.

சாலை பராமரிப்பில் உள்ள வேறுபாடுகளை கூட அறிந்திராத தீ ஹோய்க்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டுமா? என்றும் அவர் வினவினார்.

Leave a Reply