சாலை மறு சீரமைப்புக்கு நிதி ஒதுக்காதது ஏன் ?

Malaysia, News

 214 total views,  2 views today

ஷா ஆலம்-

கிள்ளான் துறைமுகத்தில் சுங்கத் துறையின் வழி அரசாங்கம் கடந்த ஆண்டு மட்டும் வெ.11.1 பில்லியன் வசூலித்தும் அது சார்ந்த வட்டாரத்தின் மேம்பாட்டிற்காக மத்திய அரசாங்கம் ஒதுக்காதது வேதனையாக இருக்கிறது என Port Klang சட்டமன்ற உறுப்பினர் Azmizam Zaman Huri தெரிவித்தார்.
பொருளாதாரத் துறைகள் துரித வளர்ச்சி கண்டு வரும் நிலையில் கிள்ளான் துறைமுகத்தைச் சார்ந்த சாலைகளும் இதர வசதிகளும் சேதமடைவதாகவும் அதனை சரி செய்ய ஆண்டுக்கு வெ.100 மில்லியன் மட்டுமே தேவைப்படுவதாகவும் அவர் சொன்னார்.

சாலைகளில் ஏற்படும் சேதம், அதன் எற்படும் குழிகள், இவற்றை மறுசீரமைக்க வெ.100 மில்லியன் என்பது மத்திய அரசாங்கம் இப்பகுதியில் இருந்து மட்டும் பெறும் வருமானத்தில் ஒரு விழுக்காடுக்கும் குறைவாக, அதாவது 0.9 விழுக்காடு மட்டுமே ஆகும் என Azmizam Zaman Huri குறிப்பிட்டார்.
அதனை சிலாங்கூர் மாநிலப் பொதுப்பணித் துறை-யிடம் (JKR) ஒப்படைத்து இங்குள்ள மக்களின் குறிப்பாக சாலைப் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்த அவர் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி செய்த 22 மாதங்களில் 2020 ஆம் ஆண்டுக்கு வெ.50 மில்லியன் ஒதுக்கிய நிலையில் தற்போதைய மத்திய அரசாங்கம் சிலாங்கூர் மாநிலத்தை எடுப்பார் கைப்பிள்ளையாகப் பார்ப்பதாக Azmizam Zaman சாடினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இறுதியில் சாலைகள் சீரமைக்கப்பட்டாலும் கூட, தற்போது நாள்தோறும் தமது அலுவலகம் இவ்விவகாரம் தொடர்பில் பொது மக்களிடமிருந்து புகார்களைப் பெறுவதாக அவர் மேலும் சொன்னார்.

Leave a Reply