சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

Uncategorized

 112 total views,  1 views today

கோலாலம்பூர்-

இன்று காலை சுல்தான் இஸ்கண்டார் ஷா நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மரணமடைந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த டொயோட்டா ஹைலெக்ஸ் ரக வாகனம் எம்பிவி ரக ஹுண்டாய் ஸ்டாரெக்ஸ் காருடன் மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்தது.
காலை 10.50 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தித்திவங்சா, ஶ்ரீ ஹர்தாமாஸ் தீயணைப்பு நிலைய வீரர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
இதில் 32 வயதான பி.மிலான் டாமினி, 31 வயதான சி.தினிஷா, 3 வயதான டி.இஷான் இவான், 4 வயதான டி.ரிஹான் இவான் ஆகியோர் மரணமடைந்தனர்.
டொயோட்டா ஹைலெக்ஸ் காரின் ஓட்டுனர் சொற்ப காயங்களுடன் மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Leave a Reply