சிகரெட் தடை தொடர்பான புதிய சட்டம் : மறு ஆய்வு செய்வீர் ! – புகையிலை – சிகரெட் தயாரிப்பு நிறூவனக் கூட்டமைப்பு கோரிக்கை !

Economy, Health, Local, Malaysia, News

 105 total views,  1 views today

புத்ராஜெயா – 31 ஜூலை 2022

புகையிலை – சிகரெட் கட்டுப்பாட்டுச் சட்டப் பரிந்துரை ந்தற்போது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்ற நிலையில் அந்தச் சட்டத்தை மீண்டும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என மலேசிய புகையிலை தயாரிப்பு கூட்டமைப்பு கோரியுள்ளது.

அந்தக் கூட்டமைப்பின் 3 முக்கியப் பிரதிநிதியாக விளங்கும் British American Tobacco (Malaysia) Bhd, JT International Berhad, Philip Morris (Malaysia) Sdn Bhd ஆகிய நிறுவனங்கள் இது குறித்து தெரிவிக்கயில், இந்த சட்ட செயலாக்கம் நடப்புக்கு ஏற்றது அல்ல எனக் குறிப்பிடுகின்றன.

அரசாங்கத்தின் நோக்கத்தைத் தவிர்த்து, சட்ட செயலாக்கத்திற்குப் பிறகு தடை செய்யப்பட்டிருக்கும் பொருட்கள் கிடைக்கப்பெறும் விதம், வரி விதிக்கப்படாத விலை போன்றவற்றை எற்படுத்தும் என அவை கூறின.

பொருளாதார நிலையில் அது மிகப் பெரியத் தக்கத்தை ஏற்படுத்தவல்லது. மேலும், இது போன்ற தடைகளை நடப்புக்குக் கொண்டு வர பல வணிகர்கள் பல்வேறான சவால்களைச் சந்திக்கின்றனர்.

அதே சமயம், சுற்றுப் பயணத்திற்காக நாட்டிற்குள் வரும் பயணிகளையும் அந்தச் சட்டம் வெகுவாகப் பாதிக்கும்.

சுகாதாரமான, சிகரெட் புகை இல்லாத அடுத்தத் தலைமுறையை உருவாக்குவதை விட இந்தச் சட்டம் நடப்புக்கு வந்தால் அதிகமான குற்றவாளிகளைத்தான் உருவாக்கும் என்கின்றன அந்த நிறுவனங்கள்.

மேலும், இந்த இளம் தலைமுறையினர் கள்ளச் சந்தையில் சிகரெட் – வேப் ஆகியவற்றைப் பெற முயற்சி செய்யும் குற்றவாளிகளை உருவாக்கவல்லது.

அதே சமயம், கடந்த மே மாதம் வரையில் 57.7% ஆக இருந்த கள்ளச் சந்தை வியாபாரம் 2020 ஆம் ஆண்டு போல 63.8% ஆக உயர்வதோடு ரிம 5 பில்லியன் மதிப்புள்ள வருமானத்தை அரசாங்கம் இழக்கும்.

எனவே, அரசாங்கம் இந்தச் சட்டப் பரிந்துரையை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என அந்த அமைப்புகள் குறிப்பிட்டன.

Leave a Reply