சிகரெட் – புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தால் வியாபாரம் பாதிக்குமா ? – விளக்கம் கொடுக்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் !

Business, Health, News

 270 total views,  2 views today

பினாங்கு – 31 ஜூலை 2022

சிகரெட் – புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தால் 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த புதிய தலைமுறையினர் சிகரெட் – வேப் போன்ற புகைக்கும் பொருட்களை வைத்திருக்க, பயன்படுத்த, வாங்க தடை விதிக்கப்படும். இதனால் வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படும் எனும் கூற்று தவறான ஒன்றாகும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தப் புதிய சட்டம் நடப்புக்கு வந்தால் ஆரோகியமான நாட்டையும் அடுத்தத் தலைமுறையையும் உருவாக்குவதைவிட நாட்டை மேலும் வலிமை இழந்ததாக மாற்றிவிடும் என myNEWS Retail Sdn Bhd (myNEWS) நிறுவனம் கூறியிருந்தது.

அந்தக் கூற்று முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்விப் பிரிவு அதிகாரி என் வி சுப்பாராவ் மறுத்துள்ளார்.

நாடு முழுவதும் 500 கிளைகளைக் கொண்டிருக்கும் myNEWS நிறுவனத்தின் வியாபார பெருமளவில் பாதிக்கப்படும் எனவும் கள்ளச் சந்தையில் சிகரெட்டுக்கான 60% கிராக்கி அதிகரிக்கும் என அந்நிறூவனம்  வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தச் சட்டம் நடப்புக்கு வந்தால், சிகரெட் விற்பனை செய்யும் முன்னரும், வாடிக்கையாளருக்குக் கொடுக்கும் முன்னரும் அவர்களின் வயதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நடைமுறையானது தனிநபர் தகவல் காப்புச் சட்டம் 2010க்கு முரணாக இருப்பதாகவும் அந்த நிறுவனம் சொன்னது.

தங்களின் தனிப்பட்டத் தகவலை மற்றவருக்குப் பகிர யாரும் விரும்பமாட்டார்கள் என அந்த நிறுவனம் சொன்னது.

புதிய சட்டத்தால் அந்த நிறுவனத்திற்குப் பெரும் பாதிப்பு எனும் கூற்றை சுப்பாராவ் மறுத்துள்ளார்.

சிகரெட்டைத் தவிர மற்றப் பொருட்களையும் வாடிக்கையாளர்கள் myNEWS கடைகளில் வாங்குகிறார்கள்.

ஒரு வேளை அந்த நிறுவனம் நட்டத்தை எதிர்நோக்கினால் அந்தக் கடைகளில் விற்கப்படும் பொருட்களின் பல்வகைத் தன்மையை அதிகரிக்க வேண்டும். இதில் எங்கு நட்டம் எங்கு ந்ந்ற்படுகிறது.

மேலும், அடையாள அட்டையைக் கொடுத்து தங்களின் வயதை உறுதிப்படுத்துவது முறையான நடவடிக்கையாகும்.

அதே சமயம், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மலேசிய மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் சிகரெட் – புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அங்கீகரிக்க ஆதரவளிக்க வேண்டும் என சுப்பாராவ் கேட்டுக் கொண்டார்.

மலேசியக் குடும்ப நலனுக்காக இந்த சட்டம் நடப்புக்கு வர வேண்டும் எனவும் அவர் சொன்னார்.

Leave a Reply