சிம்பாங் ரெங்காமில் டாக்டர் மஸ்லீ கிண்ண போவ்லிங் போட்டி !

Malaysia, Malaysia, News, Politics, Sports

 36 total views,  2 views today

– குமரன் –

சிம்பாங் ரெங்காம் – 18 செப் 2022

மக்கள் நீதிக் கட்சியான பிகேஆர் சிம்பாங் ரெங்காம் தொகுதியில் இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் டாக்டர் மஸ்லீ கிண்ண போவ்லிங் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இது குளூவாங் பேரங்காடியில் உள்ள அம்பாங் சூப்பர் போவ்ல் அரங்கில் நடைபெற்றது.

இத்தொகுதி நாடாளூமன்ற உறுப்பினரின் பெயரில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் நம்பிக்கைக் கூட்டணியின் முன்று உறுப்புக் கட்சிகளைச் சேர்ந்த 60 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இப்போட்டியை சிம்பாங் ரெங்காம் தொகுகுதி மக்கள் நீதிக் கட்சியின் துணைத் தலைவர் முகம்மட் சைட் ஜோனித் தொடக்கி வைத்தார்.

இங்குள்ள பல்லின இணைஞர்களிடையே நல்லுறவை வலுப்படுத்தவும் மக்களின் ஒற்றூமையை மேலும் ஓங்கச் செய்யவும் இப்போட்டி ஒரு முக்கியத் தளமாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இப்போட்டிக்கு சிம்பாங் ரெங்காம் தொகுதி மக்கள் நீதிக் கட்சியின் இளைஞர் பிரிவின் தலைவர் டாக்டர் இராஜு கிருஷ்ணனும் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தார்.

பங்கேற்பாளர்கள், பார்வையாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி இரவு 10.00 மணி அளவில் நிறைவை நாடியது.

Leave a Reply