சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியைக் குறிவைக்கிறதா மக்கள் சக்தி கட்சி ?

Malaysia, News, Politics

 87 total views,  1 views today

சிரம்பான் – 17 ஆகஸ்டு 2022

தேசிய முன்னணியின் உச்சமன்றத் தலைவர்கள் சிலரின் அறிக்கையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்பொழுது, அக்கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கு 15வது ஒதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, கடந்த 2009 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மலேசிய மக்கள் சக்தி கட்சிக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கலாம் எனப் பெரிதுஜ்ம் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நீலாய் சட்டமன்றத் தொகுதி அக்கட்சியின் கவனத்தில் இருக்கின்ற ஒரு தொகுதியாகக் கருதப்படுகிறது. அத்தொகுதிக்கு மலேசிய மக்கள் சக்தி கட்சி குறி வைத்திருப்பதை அதன் தேசியத் துணைத் தலைவரும் நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவருமான டத்தோ வீ. சரவணகுமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே அத்தொகுதி மலேசிய மக்கள் சக்தி கட்சி குறிவைத்த ஒரு தொகுதியாக இருப்பதோடு அங்கு அக்கட்சியின் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றன.

இருந்தபோதிலும், அண்மையக் காலமாக சரவணகுமாரின் கவனம் சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியின் பக்கம் திரும்பி இருப்பதாகவும் அறியப்படுகிறது.

மசீசவின் பாரம்பரியத் தொகுதியாக நீலாய் சட்டமன்றத் தொகுதியாகக் கருதப்படுவதாலும், தேசிய முன்னணியின் உறுப்புப் கட்சியினரிடையே பிணக்கு ஏற்படாமல் இருப்பதற்கும் மலேசிய மக்கள் சக்தி கட்சி இந்த முடிவுக்கு வருவதாக சரவணகுமார் குறிப்பிட்டார்.

தே.மு.வில் கெராக்கான் கட்சி இடம்பெற்றிருந்தபோது, சிரம்பான் ஜெயா அக்கட்சியின் வசம் இருந்தது. இப்போது அவ்வாறு இல்லை என்பதால் மக்கள் சக்தி கட்சிக்கு இது நல்லதொரு வாய்ப்பாகப் பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நீலாய் சட்டமன்றம் குறித்து முன்னதாகவே மசீச விடம் கலந்தாலோசிக்கப்பட்டது. இருந்தாலும் சரியான பதில் கிடைக்கபெறவில்லை என்பதால் இங்கேயே நேரத்தைக் கடத்தாமல் அடுத்தத் தொகுதியில் கவனம் செலுத்துகிறோம்.

கெராக்கான் விட்டுச் சென்ற தொகுதிகளை தேசிய முன்னணியின் தோழமைக் கட்சிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என தே.மு. இதற்கு முன்னர் அறிவித்திருந்தது. ஆகவே, இவ்விவகாரத்தில் சண்டையிட்டுக் கொள்ள ஒன்றுமே இல்லை என்றார் சரவணகுமார்.

இச்சூழலில் இதுவே சிறந்த தீர்வு. எனவே நாங்கள் எங்கள் செயல்பாடுகளை சிரம்பான் ஜெயாவில் தொடங்கி விட்டோம்.

இதுவரையில் சிரம்பான் ஜெயா மக்கள் வழங்கி வந்துள்ள ஆதரவு நல்ல முறையில் இருப்பதாகக் கூறிய அவர், கடுமையானப் போட்டி இருப்பதையும் அவர் மறுக்கவில்லை.

மிக முக்கியமாக, இத்தொகுதி நெகிரி செம்பிலான் மாநில ஜ.செ.க.வின் தலைவர் குணசேகரினிடம் இருந்து கடுமையானப் போட்டி நிலவலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, செனாவாங் சட்டமன்றத் தொகுதியாக இருந்த காலத்தில் நாட்டின் 12வது பொதுத் தேர்தலின்போதே குணசேகரன் அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

எனவே, சிரம்பான் ஜெயா ஜ.செ.க.வின் மிக உறுதியானக் கோட்டையாக இருந்து வந்துள்ளது. மேலும், முந்தையப் பொதுத் தேர்தலில் 10,000க்கும் மேற்பட்ட பெரும்பான்மை வாக்குகள் பெற்று குணசேகரன் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply