சிறப்பு நாடாளுமன்றக் கூட்ட அமர்வு அவசியமில்லை- பிரதமர்

Malaysia, News, Politics

 200 total views,  1 views today

கோலாலம்பூர்-

கட்சி தாவல் தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்யவும் விவாதிக்கவும் சிறப்பு நாடாளுமன்ற கூட்ட அமர்வு அவசியமானது இல்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முடிவு செய்துள்ளார்.

வரும் ஜூலை 18ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதால் இந்த சிறப்பு நாடாளுமன்ற அமர்வு அவசியமற்றதாகும்.

அரசாங்கத்தின் செலவீனங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் (சட்ட விவகாரங்கள்) டத்தோஶ்ரீ வான் ஜுனாய்டி துவாங்கு ஜபார் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கெ வெ.1,077,600-ஐ அரசாங்கம் செலவிட வேண்டியுள்ளது. இதில் சிறப்பு கூட்டத்தொடரின் மக்களவை, செனட் சபைக்கான செலவீனங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று அவர் சொன்னார்.

Leave a Reply