சிறுநீரக நோயாளிகளுக்கு தீபாவளி பொட்டலங்கள் அன்பளிப்பு

Malaysia, News

 191 total views,  1 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்,அக்.19-

தீபாவளி பெருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மில்லினியம் இயக்கமும் சிலாங்கூர் கைலாஷ் சமூகநல இயக்கமும் இணைந்து சீறுநீரக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.

இங்கு தாமான் ஶ்ரீ மூடாவில் இயங்கி வரும் செயிண்ட் ஜோன் சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தில் சிகிச்சை மேற்கொண்டு வருபவர்களுக்கு சிலாங்கூர் மில்லினியம் இயக்கத்தின் தலைவர் டத்தோஶ்ரீ கே.சரவணன், சிலாங்கூர் கைலாஷ் சமூகநல இயக்கத்தின் தலைவர் டத்தோஶ்ரீ ஏ.குனேந்திரன் ஆகியோர் வருடந்தோறும் தீபாவளி அன்பளிப்புப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

4ஆவது ஆண்டாக நடைபெற்ற இவ்வாண்டு நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.கணபதிராவ், சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் சமூக தொடர்பு ஒருங்கிணைப்பாரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான் குணராஜ் ஜோர்ஜ் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.

நாட்டை உலுக்கிய பெருந்தொற்று காலத்தில் பலர் வேலை வாய்ப்புகளை இழந்ததோடு பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மூடுவிழா கண்டன. சொந்த தொழில் செய்து வந்த பலர் வருமான பாதிப்பை எதிர்கொண்டனர். ஆனாலும் வசதி குறைந்த மக்களுக்கு வழங்கி வரும் உதவித் திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டு விடக்கூடாது எனும் நோக்கில் தீபாவளி அன்பளிப்பு பொட்டலங்களை வழங்கி உதவிய டத்தோஶ்ரீ சரவணன். டத்தோஶ்ரீ குனேந்திரன் ஆகியோர் நற்செயல் பாராட்டுக்குரியது. இச்சேவை வரும்காலங்களில் தொடர வேண்டும் என்று இந்நிகழ்வில் உரையாற்றியபோது கணபதிராவ் குறிப்பிட்டார்.

மேலும், தீபாவளி பெருநாளில் வசதி குறைந்தவர்களும் தங்களது பெருநாளை சந்தோஷமாக கொண்டாட வேண்டும் எனும் நோக்கில் டத்தோஶ்ரீ சரவணன், குனேந்திரன் ஆகியோரின் நடவடிக்கைகளை பாராட்டுக்குரியது. 4ஆவது முறையாக இவ்வாண்டும் இந்நிகழ்வை தொடர்ந்து கொண்டிருப்பது வரவேற்கத்தகது என்று குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

இந்த தீபாவளி அன்பளிப்பு நிகழ்வில் இனம், மதம் பார்க்காமல் 50க்கும் மேற்பட்ட பல இனங்களைச் சேர்ந்த சிறுநீரக நோயாளிகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன என்றும் கடந்தாண்டு கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நடத்த முடியாமல் போனதாகவும் இவ்வாண்டு இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது என்று டத்தோஶ்ரீ சரவணன், டத்தோஶ்ரீ குனேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் டத்தோ ராவ், ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராய்டு, இந்திய சமூகத் தலைவர் கோபி, மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் சிலாங்கூர் மாநில தலைவர் மணிமாறன், துணைத் தலைவர் தேவன், செயிண்ட் ஜோன் சிறுநீரக சுத்திகரிப்பு மைய நிர்வாகி,  இயக்கங்களின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply