சிறுபான்மை மக்களிடம் ஆதிக்கம் செலுத்த முற்படும் பாஸ் கட்சி- கணபதிராவ் குற்றச்சாட்டு

Malaysia, News

 163 total views,  1 views today

ஷா ஆலம்,நவ.16-

நான்கு இலக்க எண் கடைகளுக்கு தடை விதிப்பதன் வாயிலாக சிறுபான்மை இன மக்களின் மீது ஆதிக்கம் செலுத்த பாஸ் கட்சி முற்படுகிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குற்றஞ்சாட்டினார்.

நான்கு இலக்க எண் கடைகளை தடை விதிப்பதற்கு சமய விவகாரங்களை முன்வைக்கும் பாஸ் கட்சி, உண்மையிலேயே கை வைக்க வேண்டுமென்றால் கெந்திங் சூதாட்ட மையத்திற்கும் மதுபான உற்பத்தி ஆலைக்கும் தடை விதித்திருக்க வேண்டும். மத்திய அரசாங்கத்திற்கு ஆதாயம் வேண்டும் என்பதற்காக இந்த விவகாரங்களை தொடாமல் மாநில அளவில் சமய விவகாரங்களை தூண்டி விடப்பார்க்கிறது பாஸ் கட்சி.

நான்கு இலக்க எண் கடைகளை தடை செய்ய முற்படும் பாஸ் கட்சி தனது மாநிலத்தில் தலீபானிஸத்தை கொண்டு வர முற்படுவதாக அவர் கூறினார்.

Leave a Reply