சிறு – நடுத்தர நிலை வியாபாரிகளின் மேம்பாட்டிற்காக சீட் மீண்டும் வரவேண்டும் ! – மைக்கி கோரிக்கை

Business, Economy, Local, Malaysia, News

 18 total views,  4 views today

கோலாலம்பூர் | 19-1-2023

சிறு – நடுத்தர  வியாபாரிகளின் மேம்பாட்டிற்காக இயங்கி அவர்களுக்கு கடன் உதவிகளைக் கொடுத்து வந்த தெக்கூன் – எஸ்.எம்.இ போன்ற அமைப்புகள் போன்று சீர் மீண்டும் உயிர் பெற்று செயல்பட வேண்டும் என மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் கலந்துரையாடல் நடத்தியதாக அதன் தலைவர் டத்தோ என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

முந்தைய காலங்களைப் போல 200 மில்லியன் நிதியை தெக்கூன் தெக்கூன் – போன்ற அமைப்புகளின் வாயிலாக ஒதுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் சொன்னார்.

எதிர்வரும் பிப்பரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் வரவு – செலவுத் திட்ட அறிக்கை தொடர்பாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் மைக்கி அமைப்பு கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, இந்திய வியாபாரிகளுக்கு வழங்கப்படும் நிதிகளைக் கண்காணிக்கவும், வழிக்காட்டவும்  2018 – க்கு முன் இருந்தது போல் சீட் எனப்படும் இந்திய தொழில்முனைவர் மேம்பாட்டு சிறப்பு செயலகம்  மீண்டும் பிரதமர் துறையின் கீழ் அமைக்கப்படவேண்டும் என மைக்கி கோரிக்கை வைத்துள்ளதாக டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply