சிலாங்கூரில் போட்டியிடுகிறார் வேதமூர்த்தி?

Malaysia, News, Politics

 218 total views,  1 views today

கோலாலம்பூர்-

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக எம்ஏபி எனப்படும் மலேசிய முன்னேற்ற கட்சியின் தலைவர் பொன்.வேதமூர்த்தி போட்டியிடும் தொகுதி குறித்து இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று நம்பப்படுகிறது.

முன்னாள் அமைச்சரான வேதமூர்த்தி இம்முறை தேசிய முன்னணி ஆதரிக்கவுள்ளதாக கூறிய நிலையில் தேமு சின்னத்தின் கீழ் அவருக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படலாம் என முன்பு ஆருடம் கூறப்பட்டது.

நேற்று தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது மஇகா உட்பட மலேசிய மக்கள் சக்தி கட்சி, ஐபிஎப், பார்ட்டி சிந்தா மலேசியா, கிம்மா ஆகிய கட்சிகள் போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன.

வேதமூர்த்திக்கு சீட் இல்லையா? எனும் கேள்வி எழுந்த நிலையில் அவருக்கான தொகுதி எது? இன்று அல்லது நாளைக்குள் அறிவிக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து அறியப்படுகிறது.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஏதேனும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் வேதமூர்த்தி களமிறக்கப்படுவது கிட்ட த்தட்ட உறுதியாகி விட்டது என நம்பப்படுகிறது.

Leave a Reply