சிலாங்கூரில் வேலை வாய்ப்பு சந்தை அக்.23இல் தொடங்கும்

Uncategorized

 190 total views,  1 views today

ஷா ஆலம்-

சிலாங்கூர் மாநில அரசின் 2021 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புச் சந்தை இம்மாதம் 23 ஆம் தேதி தொடங்கி வரும் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி வரை நடைபெறும்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் 25,000 வேலை வாய்ப்புகள் வழங்குப்படுவதாக இளம் தலைமுறையினர்  மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தை  ஹைப்ரிட் எனப்படும் நேரடி நேர்முகத் தேர்வு மற்றும் இயங்கலை என கலவையான முறையில் நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

ஷா ஆலம், கோல சிலாங்கூர், கோல குபு பாரு, உலு லங்காட் மற்றும் பெட்டாலிங் ஆகிய பகுதிகளில் நடைபெறும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் சுமார் 200 நிறுவனங்கள் வரை பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply