சிலாங்கூர் அரசின் 5 ஆண்டுகால திட்டவரைவு; மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை உறுதி செய்யும்- கணபதிராவ்

Malaysia, News

 128 total views,  1 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்,ஜூலை 8-

அடுத்து வரும் ஐந்தாண்டு கால திட்ட வரைவை சிலாங்கூர் மாநில அரசு இன்று வெளியிட்டது. பொருளாதாரம், சமூகவியல், வள மேம்பாடு, நிர்வாகத் திறமை ஆகிய 4 முக்கிய கூறுகளை உள்ளடக்கிய ஐந்தாண்டுகால திட்டவரைவை  மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.

இது குறித்து கருத்துரைத்த மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் மாநில வளத்துடன் மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவது தொடர்பிலான  கூறுகளை இத்திட்டவரைவை உள்ளடக்கியுள்ளது.

பல்கலைக்கழக பேராசிரியர்கள், நிபுணத்துவவாதிகள் ஆகியோர் பங்கேற்ற சமூகவியல் தொடர்பிலான கலந்துரையாடலுக்கு தாம் தலைமையேற்ற நிலையில், அதில் மாநில மக்களின் வாழ்வாதாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக சிலாங்கூர் மாநிலம் வளர்ச்சி கண்ட நகரங்களை கொண்ட மையப்புள்ளியாக விளங்குகிறது. மாநில வளர்ச்சியினூடே மக்களின் வாழ்வாதாரமும் மேம்பாடு அடையச் செய்வதே வளர்ச்சியாகும்.

இம்மாநிலத்திலுள்ள வீடுகளின் விலை உயர்ந்து கொண்டே போகும் நிலையில் அதனை வாங்கும் சக்தியில்லாத நிலையிலிருந்து சொந்த வீட்டுமையாளர்களாக மக்களை உருவாக்க வேண்டும்.

அதனை முன்னிறுத்தியே சிலாங்கூர்கூ, இடாமான் வீடமைப்புத் திட்டம் போன்ற வீட்டுடைமை திட்டங்களை மாநில் அரசு அறிமுகபடுத்தியது.

அதேபோன்று வறுமைக் கோட்டிலுள்ள  மக்களின்வ வாழ்வாதாரச் சுமையை குறைக்கும் நோக்கில் பிங்காஸ் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது.

சமூக மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை மாநில அரசு முன்னெடுத்துள்ள நிலையில் 4 முக்கிய கூறுகளை உள்ளடக்கிய திட்ட வரைவை அறிமுகம் செய்ததில் சிலாங்கூர் மாநிலமே முதன்மையாக திகழ்கிறது என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.

Leave a Reply