சிலாங்கூர் இந்திய வணிகர்களுக்கு தீபாவளி கடனுதவி திட்டம்

Business, Malaysia, News

 67 total views,  1 views today

இரா. தங்கமணி

ஷா ஆலம் – 12 செப் 2022

சிலாங்கூரில் உள்ள இந்திய வணிகர்களுக்கு தீபாவளி கடன் உதவி வழங்கும் திட்டத்தை சிலாங்கூர் மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.

வரும் அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பெருநாளை முன்னிட்டு பல்வேறு வணிகங்களை மேற்கொள்ளும் இந்தியர் பொருளாதார அடிப்ப்\டையில் உதவிக்கரம் நீட்டும் வகையில் ‘I Bermusim’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹாஜா ரோட்ஸியா பிந்தி இஸ்மாயில் தெரிவித்தார்.

ஹிஜ்ரா அறவாரியம் அறிமுகம் செய்துள்ள இத்திட்டத்தின் வாயிலாக சிலாங்கூரில் பிறந்தவர்கள் அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசிப்பவர்கள் இத்திட்டத்தில் பங்கு பெற தகுதி பெறுகின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் தீபாவளிச் சந்தை நடைபெறும் இடங்களில் வணிகம் மேற்கொள்வோர் வெ.1,000.00 முதல் வெ.20,000.00 வரையிலான கடனுதவியையும் வீடு அல்லது கடை வளாகங்களில் வணிகம் மேற்கொள்வோர் வெ.5,000.00 வரையிலான கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அவர் சொன்னார்.

இக்கடனுதவியை பெறுவோர் 6 மாதங்களுக்குள் தங்களது கடனை திருப்பி செலுத்தி விட வேண்டும் எனவும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் தங்களது நிறுவன சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் சொன்னார்.

செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 14ஆம் தேதி வரையிலும் இக்கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என கூறிய ஹாஜா ரோட்ஸியா, முழுமையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் 5 நாட்களில் பரிசீலிக்கப்படும் என்று சொன்னார்.

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தியர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இச்சந்திப்பில் ஹிஜ்ரா சிலாங்கூர் நிர்வாக இயக்குனர் டத்தோஸ்ரீ முகமட் சுபாராடி உடனிருந்தார்.

Leave a Reply