சிலாங்கூர் சுல்தானின் கவனத்தை ஈர்த்த ‘நாடாளுமன்றத்தை ஆளும் குரங்குகளும் தவளைகளும்’ ஓவியம் (Video News)

Malaysia, News

 297 total views,  1 views today

ஷா ஆலம் – 12 ஏப்பிரல் 2022

நாடாளுமன்றத்தை குரங்குகளும் தவளைகளும் ஆள்வதை போன்ற ஓவியம் சிலாங்கூர் சுல்தான் Sharafuddin Idris Shah Aljah-இன் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

தம்முடைய கவனத்தை பெரிதும் ஈர்த்த இந்த ஓவியத்தை வாங்கி தம்முடைய தனிபட்ட படிப்பறையில் வைக்கவும் எதிர்காலத்தில் அதனை ஏலத்தில் விடவும் சுல்தான் திட்டமிட்டிருப்பதாகவும் Selangor Royal Office எனும் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுல்தானின் கவனத்தை ஈர்த்த இந்த ஓவியத்தில் அப்படி என்ன அதிசயம் உள்ளது என தோன்றலாம்.

மலேசிய அரசியலையும் அரசியல்வாதிகளையும் வேடிக்கை கூட்டம் என கருதி சுல்தான் சாடுவது ஓவியத்தை காணும் பலருக்கும் புலப்படும்.

 குரங்குகளும்  தவளைகளும் பலவகை முக பாவனைகளுடன் நாடாளுமன்றத்தில் கூட்டம் நடத்துவதாக இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.

Leave a Reply