சிலாங்கூர் ஜசெகவின் தலைவராக கோபிந்த் சிங், துணைத்தலைவராக கணபதிராவ்

Malaysia, News, Politics

 344 total views,  1 views today

ஷா ஆலம், நவ.15-


நடந்து முடிந்த சிலாங்கூர் மாநில ஜசெக தேர்தலில் மூன்று இந்தியர்கள் தேர்வாகியுள்ளனர்.

பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ், ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் வீ. பாப்பராய்டு ஆகியோர் மாநில செயலவைக்கு தேர்வாகியுள்ளனர்.

இதில் கோபிந்த் சிங் டியோ 615 வாக்குகளும் கணபதிராவ் 633 வாக்குகளும் பாப்பராய்டு 504 வாக்குகளும் பெற்றனர்.

இதனிடையே, மாநில ஐசெக தலைவராக கோபிந்த் சிங், துணைத் தலைவராக வீ.கணபதிராவ் ஆகியோர் தேர்வான நிலையில் கட்சியின் நிர்வாகச் செயலாளராக பாப்பராய்டு நியமனம் செய்யப்பட்ட வேளையில் 5 நியமன செயற்குழு உறுப்பினர் பதவியில் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ப.யுகராஜா நியமிக்கபட்டார்.

Leave a Reply