
சிவகுமாருக்கு துணை அமைச்சர் பதவி என்றால் முழு அமைச்சர் யார் ?
115 total views, 1 views today
இரா. தங்கமணி | 29-11-2022
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் அமையப்படவுள்ள புதிய அமைச்சரவையில் இடம்பெறப் போகும் இந்தியத் தலைவர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
புதிய அமைச்சரவையில் ஜசெகவை பிரதிநிதித்து டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதி ராவ், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் ஆகியோரில் யாரேனும் ஒருவர் முழு அமைச்சராகவும் மற்றொருவர் துணை அமைச்சராகவும் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதில் சிவகுமார் துணை அமைச்சராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.
சிவகுமார் 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது பேரா மாநிலத்தை கைப்பற்றிய மக்கள் கூட்டணி அரசின்போது மாநில சட்டமன்ற சபாநாயகராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஞ்சிய மூவரில் யார் முழு அமைச்சராக பதவியேற்பர் என்பது ஆடு புலி ஆட்டமாக உள்ளது.