சீன விமான விபத்தில் 132 பேர் பலி

News, World

 236 total views,  2 views today

பெய்ஜிங்-

சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த யாரும் உயிருடன் இருப்பதாக கண்டறியப்படவில்லை என்றும், எனவே உள்ளே இருந்த 132 பேரும் உயிரிழந்திருக்க கூடும் என்றும் அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஒரு விமானம் 132 பயணிகளுடன் குன்மிங்கில் இருந்து குவாங்சோ நோக்கிச் சென்றது. அப்போது குவாங்ஸி மாகாணத்தில் மலைப்பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

இதனால் அப்பகுதியே கடும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இதைத் தொடர்ந்து மீட்பு படையினர் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது. விபத்து நடந்து 18 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் உயிருடன் இருப்பவர்கள் யாரும் கண்டறியப்படவில்லை என மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த 123 பேரும் விமானி உள்ளிட்ட 9 ஊழியர்களும் இறந்திருக்கலாம் என்றும் சீன அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply