சுக்மா கராத்தே போட்டியில் புதிய மைல்கல் பதிக்கும் இந்திய வீராங்கனைகள்!

Malaysia, Malaysia, News, Sports

 21 total views,  2 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 19 செப் 2022

தற்போது நடந்து கொண்டிருக்கும் 20வது சுக்மா கராத்தே போட்டியில் தங்கப்பதக்கத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் வென்று புதிய சாதனைகளை புரிந்துள்ளனர் இந்திய இளம் பெண்களான புனிதா சுரேஷ், கர்ஷனா புவனேசன், ஜீவித்ரா நடராஜன், மாதுரி புவனேசன் ஆகியோர்.

55 கிலோ எடை பெண்கள் பிரிவில் மாதுரி புவனேசன் சுக்மாவில் தமது முதல் தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளார். சுங்கை பட்டாணியைச் சேர்ந்த 23 வயது மாதுரி, முன்னதாக 2019 ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கத்தை வெற்றி கொண்டுள்ள சாதனைத் தடத்தைப் பதித்த மங்கை ஆவார்.

கடந்த 2017ஆம் ஆண்டு கோலாலம்பூர் சீ விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கமும் 2019வது மே மாதம் உலகளாவிய நிலையில் முதன்மை நிலை கராத்தே வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் மலேசியராவார்.

புவனேசன் – கோகிலவாணி இணையினரின் தவப்புதவியான மாதுரி 10 வயது முதலே கராத்தே தற்காப்புக் கலையோடு பரதக் கலையையும் கற்றவர் ஆவார்.

அதே சமயம், புனிதா சுரேஷ், கர்ஷனா புவனேசன், ஜீவித்ரா நடராஜன், மாதுரி புவனேசன் ஆகிய நால்வரும் நடந்து கொண்டிருக்கும் சுக்மா கராத்தே Kumite பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

மேலும், 61 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் புனிதா சரேஷ்.

மொத்தத்தில் மலேசிய கராத்தே துறையில் தங்களின் வெற்றியை உறுது செய்த புனிதா சுரேஷ், கர்ஷனா புவனேசன், ஜீவித்ரா நடராஜன், மாதுரி புவனேசன் ஆகியோருக்கு ஐ சேனலின் வாழ்த்துகள்.

Leave a Reply