சுங்காய் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு விளையாட்டு உடைகளை வழங்கியது வாரிசான் மெடிக் கியூ குழுமம் !

1 Minute News, Education, Indian Student, Malaysia, Malaysia, News, Tamil Schools

 123 total views,  2 views today

சுங்காய் – 31 ஜூலை 2022

இங்குள்ள சுங்காய் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வாரிசான் மெடிக் கியூ குழுமம் விளையாட்டு உடைகளை வழங்கி உதவியுள்ளது.

சுங்கை தோட்டத் தமிழ்ப்பள்ளியில் போட்டி விளையாட்டு நடைபெற இருக்கின்றது. அதனை முன்னிட்டு அப்பள்ளி மாணவர்களுக்கு இந்த உடை வழங்கப்பட்டது என வாரிசான் மெடிக் கியூ குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் வழக்கறிஞருமான நவனீத் பிரபாகரன் தெரிவித்தார்.

வாரிசான் மெடிக் கியூ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் நவனீத் பிரபாகரனுக்கு சுங்காய் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இராமக்கிருஷ்ணன் நினைவுப் பரிசை வழங்குகிறார். உடன் தஞ்சோங் மாலிம் மாவட்ட மன்ற செயலாக்கப் பிரிவின் தலைமை அதிகாரி கென்னடி.

வகுப்பறை கல்வி, பாடத்திட்டம் ஆகியவற்றோடு வகுப்பறைக்கு வெளியில் இது போன்ற விளையாட்டு நடவடிக்கைகளும் இணைந்ததே முழுமையான கல்வி முறை என மலேசியக் கல்விக் கொள்கை கூறுகின்றது. அதன் அடிப்படையில் வாரிசான் மெடிக் கியூ குழுமத்தின் சமூகப் பொறுப்புடைமைப் பணியாக இது முன்னெடுக்கப்பட்டதாக நவனீத் குறிப்பிட்டார்.

உதவியைப் பெர்றுக் கொண்ட சுங்காய் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மாணவர்களுடன் ஆசிரியர்கள்

மேலும், தமிழ்ப்பள்ளியே நமது அடையாளம் எனும் கொள்கையின் அடிப்படையில் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கே அனைத்துப் பெற்றோரும் அனுப்ப வேண்டும் என நவனீத் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, விளையாட்டு உடைகளை உதவியாகப் பெற்றுக் கொண்ட சுங்காய் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இராமக்கிருஷ்ணன் தமது நன்றியை வாரிசான் மெடிக் கியூ குழுமத்திற்கும் அதன் நிர்வாக இயக்குநர் நவனீத்திற்கும் தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply