சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளியின் 15 மாணவர்களுக்கு மடிக்கணினிகள்

Uncategorized

 324 total views,  1 views today

டி. ஆர். ராஜா

ஜோர்ஜ்டவுன்

பினாங்கு சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி யில் பயிலும் பி 40 பிரிவைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை மாணவர்களின் பயன்பாட்டிற்காக கொடுத்து உதவினர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.ஜீ.குமார் கூறினார்.


சில ஆண்டுகளுக்கு முன்பு வி-செல் தனியார் நிறுவனம் பள்ளியின் கணினி அறையில் பயன்படுத்தி க் கொள்ள வழங்கிய மடிக்கணினிகளைத் தற்போது உள்ள சூழலைக் கருத்தில் கொண்டு ,மடிக்கணினி வாங்க இயலாத மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பி40 பிரிவு மாணவர்களும் கல்வியில் பின்தங்கி விடாமல் இருப்பதற்காக இக்கணினிகள் வழங்கப்பட்டன.

பெரும்பாலான தமிழ் மாணவர்கள் மடிக்கணினிகள், நோட்பூக் மற்றும் டேப்லேட்டுகள் இல்லாமல் வகுப்பில் இணையத்தின் வழி நடத்தபடும் பாடங்களை த் தொடர முடியாமல் அவதிப்பட்டிருக்கின்றனர் .

இதனால் கல்வியில் பின்னடைவு காண பயன்படுத்தப்படாத இந்த க் கணிணிகள் மாணவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது என்று தலைமையாசிரியர் எம்.ஜி.குமார் குறிப்பிட்டார்.

Leave a Reply