சுங்கை சிப்புட்டில் உள்ள ம.இ.கா. சொத்துகள் யாருக்கும் விற்கப்படவில்லை ! – விக்னேஸ்வரன்

Malaysia, News, Politics, Polls

 94 total views,  1 views today

இரா. தங்கமணி

சுங்கை சிப்புட் – 27/10/2022

சுங்கை சிப்புட்டிலுள்ள மஇகா சொத்துகள் யாவும் மஇகா வசமே உள்ளன. அவை தனி நபருக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விற்கப்படவில்லை என்று மஇகா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ ச..விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இங்குள்ள மாநாட்டு மையம், அதன் எதிர்ப்புறம் உள்ள வாகன நிறுத்துமிடம், தேசிய முன்னணி அலுவலகம், கேபிஜேவுக்கு சொந்தமான நிலத்திலுள்ள வீடுகள் என அனைத்தும் ம இகாவுக்கு சொந்தமாக்கப்பட்டுள்ள சொத்துகள் ஆகும்.

சுங்கை சிப்புட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துன் ச.சாமிவேலு தலைமையில் உருவான இந்த சொத்துகள் எல்லாம் தனியார் வசமாகின என்று சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் அவை அனைத்தையும் மஇகாவின் சொத்துடைமைகளாக உருமாற்றியுள்ளோம்.

மாநாட்டு மையத்தின் பராமரிப்பு முன்பு தனியார் நிறுவனத்திடம் இருந்தது. ஆனால் இப்போது அதன் பராமரிப்பை தொகுதி மஇகாவே நிர்வகிக்கிறது.

அதேபோன்று கேபிஜே நிலத்தில் உள்ள 9 வீடுகளை முதியோர் இல்லமாக மாற்றும் நடவடிக்கே முன்னெடுப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாது இங்குள்ள எம்எச் ஹோட்டலின் முன்பு வாங்கப்பட்ட கட்டடத்தில் இரத்த சுத்திகரிப்பு மையத்தை நிறுவுவதற்கான அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது. 6 இயந்திரங்களை பொருத்தி இங்குள்ள மக்கள் பயனடைவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இங்கு வரும்போது வெறும் வாக்குறுதிகளை வழங்க மட்டும் வருவதில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என்று பெருமையாக சொல்கிறேன் என்று நேற்று இங்கு நடந்த மலேசியரகலைஞர்களுடம் ஒரு மாலை பொழுது நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு சொன்னார்.

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் வழங்கிய இந்நிகழ்வில் அதன் நிறுவனர் டத்தோ மாலிக் உட்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply